ADDED : டிச 23, 2025 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி மேடையில் பேசுகிறார்; ஆனால், அதில் தெளிவில்லை. சண்டை காட்சிகளில் நடிப்பது போலவே விஜய் பேசுகிறார்; நாங்கள் தான் துாய்மையான கட்சி நடத்துகிறோம் என்கிறார். பல கட்சிகளில் இருந்தோர், அவருடன் சேர்ந்துள்ளனர். விஜய் கட்சியில் கொள்கை பரப்பு செயலராக இருப்பவர், இந்தியா முழுதும் லாட்டரி டிக்கெட் விற்றவர். லேட்டஸ்ட்டாக, எங்க கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையனும் த.வெ.க.,வுக்கு போயிருக்கிறார். அ.தி.மு.க.,வில் 53 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்து, பல கல்லுாரிகள், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்துள்ளார். அதற்கு அ.தி.மு.க., தான் காரணம். இவ்வளவு வசதி, பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, கட்சிக்கே இடைஞ்சல் செய்ததால், அவரை கட்சியை விட்டு நீக்கினோம். இப்படிப்பட்ட கலப்படமான மனிதர்கள் தான் விஜய் பக்கம் உள்ளனர். அதனால் தான், த.வெ.க., துாய்மை கட்சியல்ல; கலப்பட கட்சி என்கிறேன்.
-- முனுசாமி, துணை பொதுச்செயலர், அ.தி.மு.க.,

