ADDED : பிப் 15, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஊராட்சிகளில் விதிக்கப்படும், வீட்டு வரியை, சொத்து வரி எனப் பெயர் மாற்றம் செய்ய, சட்டசபையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆறாவது மாநில நிதி ஆணையம், 'வீட்டு வரி' என்ற சொல், வீடுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும்; மற்ற வகை கட்டடங்களுக்கு அல்ல என்ற தவறான கருத்துப் பதிவை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளது.
அதன் அடிப்படையில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும், 'வீட்டு வரி' என்ற பெயரை, 'சொத்து வரி' என மாற்றம் செய்ய, பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி வீட்டு வரி என்ற பெயரை, சொத்து வரி என மாற்றம் செய்ய, 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை நேற்று, அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டசபையில் தாக்கல் செய்தார்.

