லோக்சபா தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல. வியூகம்: கமல் கண்டுபிடிப்பு
லோக்சபா தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல. வியூகம்: கமல் கண்டுபிடிப்பு
ADDED : மார் 24, 2024 01:34 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல. அது வியூகம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார். வரும் 29ம் தேதி முதல் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்ய உள்ளார்.
சென்னையில் நிருபர்களைச் சந்தித்த கமல் கூறியதாவது:
எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து சாதியம் தான் எனக்கான எதிரி. யார் விலங்கிடப்பட்டு இருக்கிறார்கள் என தெரிய வேண்டுமானால் சாதி கணக்கெடுப்பு அவசியம்.
திமுக.,வை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்து விட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டிவி, நமது ரிமோட்; அது இங்கு தான் இருக்கும். நம் கையில் தான் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டிவிக்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள் தான் நமக்கு முக்கியம். என் வீட்டு டிவியை உடைத்தால் என்ன?
நான் காந்தியின் கொள்ளு பேரன். லோக்சபா தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல. வியூகம். இவ்வாறு கமல் கூறினார்.

