ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை: பன்னீர்செல்வம் பேட்டி
ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை: பன்னீர்செல்வம் பேட்டி
ADDED : ஜன 19, 2025 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ''ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை,''என திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
அவர் கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்போம் என்பது ரகசியம். தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகங்கள் இடைத்தேர்தலில் அரங்கேறும் என்பதால் நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை. அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தின் சக்திகள் இன்றைக்கு பிரிந்து கிடக்கின்றன. இந்த சக்திகள் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற முடியும் என்றார்.