sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகம் மட்டும் இல்லை; தெலுங்கானாவும் இலக்கு: பாஜவில் இணைந்ததற்கு காரணம் சொல்கிறார் கஸ்தூரி

/

தமிழகம் மட்டும் இல்லை; தெலுங்கானாவும் இலக்கு: பாஜவில் இணைந்ததற்கு காரணம் சொல்கிறார் கஸ்தூரி

தமிழகம் மட்டும் இல்லை; தெலுங்கானாவும் இலக்கு: பாஜவில் இணைந்ததற்கு காரணம் சொல்கிறார் கஸ்தூரி

தமிழகம் மட்டும் இல்லை; தெலுங்கானாவும் இலக்கு: பாஜவில் இணைந்ததற்கு காரணம் சொல்கிறார் கஸ்தூரி

8


ADDED : ஆக 15, 2025 10:03 PM

Google News

8

ADDED : ஆக 15, 2025 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தமிழகம் மட்டும் அல்லாமல் தெலுங்கானாவிலும் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக பாஜவில் சேர்ந்தேன்,'' என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்த நடிகை கஸ்தூரி இன்று சென்னையில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜவில் இணைந்தார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சி சார்ந்த அரசியலில் இருக்கக்கூடாது. இயக்கம் சார்ந்த சமூகப்பணி மட்டும் செய்ய வேண்டும் என நினைத்த எனக்கு, சமீப காலமாக தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்கள் மன உளைச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.இது தொடர்பாக எனது நண்பர் மற்றும் அரசியல் சார்ந்த நண்பர்களுடன் பகிர்ந்து இருந்தேன்

இரண்டு முறை நயினார் நாகேந்திரனிடம் பேசினேன். அப்போது அவர், ' வெளியில் இருந்து நீ கத்தினாலும் அது ஒரளவு தான் கேட்கும். ஏற்கனவே சங்கி என்ற முத்திரை உன்மீது உள்ளது. அதனை தைரியமாக நல்லா செய்யலாம் என சொன்னார். இதனையே அனைவரும் கூறினர்.சுதந்திர தின விழாவுக்கு கமலாலயம் சென்று, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜவில் சேர்ந்தேன்.

மக்களுக்காக எனது குரல் ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கும். ஒரு சில விஷயங்களை வெளியில் இருந்து செய்வதை விட, உள்ளே இருந்து செய்வது ஒரு விரைவான பலனை கொடுக்கும்.இதனால், அமைப்புக்கு உள்ளே இருந்து செய்ய வேண்டியது என்பதற்காக பாஜவில் இணைந்தேன்.

கடந்த 5 ஆண்டுகளாக தெலுங்கானாவில் இருக்கிறேன்.புகுந்த வீடாக மட்டும் அல்லாமல் எனக்கு பெரிய ஆதரவு கொடுத்தது தெலுங்கு மக்கள் தான். அவர்களுக்கு கடமையாற்ற வேண்டியுள்ளது. தமிழகம் மட்டும் அல்லாமல் புகுந்த வீடான தெலுங்கானாவில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்றால் தேசிய நீரோட்டம் தான் சரி.

அதிமுக இரட்டை இலை, எம்ஜிஆர் ஜெயலலிதா அப்படி என்ற விஸ்வாசம் என்றும் இருக்கும். தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இருக்கும் பின்னணி எனக்கும் அந்த விஸ்வாசம் இருக்கலாம். பிரச்னை இல்லையே. இவ்வாறு கஸ்தூரி கூறினார்.






      Dinamalar
      Follow us