sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருணை பணி தராதது ஏமாற்றுவதற்கு சமம்; அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

/

கருணை பணி தராதது ஏமாற்றுவதற்கு சமம்; அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

கருணை பணி தராதது ஏமாற்றுவதற்கு சமம்; அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

கருணை பணி தராதது ஏமாற்றுவதற்கு சமம்; அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

5


UPDATED : பிப் 27, 2026 08:48 PM

ADDED : பிப் 27, 2026 08:41 PM

Google News

5

UPDATED : பிப் 27, 2026 08:48 PM ADDED : பிப் 27, 2026 08:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'முதல்வரின் அறிவிப்பை பின்பற்றி கருணைப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. அவ்வாறு செய்யாமல் இருப்பது ஏமாற்றுவதற்கு சமம்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்தது.

துாத்துக்குடி மாவட்டம், முடிவைத்தனேந்தல் ஜெயதுர்காவேணி தாக்கல் செய்த மனு:ஏரல் போலீஸ் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்த என் தந்தை பாலு, 2021 பிப்., 1ல் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மது போதையில் வந்த சரக்கு வாகன டிரைவர் முருகவேல், வாகனத்தை மோத செய்து, அவரை கொலை செய்தார். அப்போது, முதல்வராக இருந்த பழனிசாமி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணி நியமனம் வழங்கப்படும் என, அறிவித்தார். அதன்படி, எனக்கு பணி வழங்க, டி.ஜி.பி.,க்கு விண்ணப்பித்தேன்.

அவர், 'என் குடும்பம் வறுமையில் இல்லை' என, 2023ல் நிராகரித்தார். எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தேன். தள்ளுபடி செய்து, தனி நீதிபதி உத்தரவிட்டார். திருமணமான மகள் கருணை பணி நியமனம் பெற தகுதியுடையவர் என விதிகளில் உள்ளதை, தனி நீதிபதி கருத்தில் கொள்ள தவறிவிட்டார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

பிப்., 25ல் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் தந்தை கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை பணி வழங்குவது குறித்து முதல்வர், அமைச்சர்கள் வெளியிடும் அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்பதை இவ்வழக்கு உணர்த்துகிறது' என, தெரிவித்தனர்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன், 'மனுதாரருக்கு கருணை பணி வழங்க, அரசுக்கு டி.ஜி.பி., புதிதாக பரிந்துரைத்துள்ளார். அதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மனுதாரரை போல் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு பணி வழங்க முடியவில்லை. காரணம் குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே அரசு பணியில் உள்ளனர்' என, தெரிவித்தார்.

நீதிபதிகள், 'பணியின் போது சமூக விரோதிகளால் கொல்லப்படும் அரசு ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு, கருணை பணி நியமனம் வழங்கப்படும் என முதல்வர், அமைச்சர்கள் அறிவிக்கின்றனர். முதல்வரின் அறிவிப்பை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. அவ்வாறு செய்யாமல் இருப்பது ஏமாற்றுவதற்கு சமம்' என, அதிருப்தி தெரிவித்தனர்.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'அப்போதைய முதல்வரின் உத்தரவுப்படி, மனுதாரருக்கு பணி வழங்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் மார்ச் 13ல் தெளிவுபடுத்த வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us