ADDED : நவ 05, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஒரே பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவது போல மோசடி நடந்திருப்பது, 2023ம் ஆண்டு தெரிய வந்தது.
விசாரணையில், 295இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும், 700க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பல்வேறு கல்லுாரிகளில் பணியாற்றுவது போல, போலியாக பதிவு செய்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரிக்க, அண்ணா பல்கலை சார்பில் குழு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, போலி பேராசிரியர்கள் பணியாற்றிய, 140 இன்ஜினியரிங் கல்லுாரிகளிடம், விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

