குணா பட பாடலை பயன்படுத்தியதற்காக ‛மஞ்சுமல் பாய்ஸ்' பட நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
குணா பட பாடலை பயன்படுத்தியதற்காக ‛மஞ்சுமல் பாய்ஸ்' பட நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
UPDATED : மே 23, 2024 12:20 AM
ADDED : மே 22, 2024 10:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதற்காக மஞ்சுமல் பாய்ஸ் பட நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்ப பட்டு உள்ளது.
இளையராஜா சார்பில் அவரது வக்கீல் சரவணன் அனுப்பி உள்ள நோட்டீசில் தெரிவித்து இருப்பதாவது: மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலை முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தவேண்டும். அல்லது அந்த படத்தில் இருந்து அந்த பாடலை நீக்கவேண்டும்.
பாடலை பயன்படுத்தியதற்காக உரியஇழப்பீட்டையும் வழங்க வேண்டும். இழப்பீட்டை வழங்காவிட்டால் பதிப்புரிமையை வேண்டும் என்றே மீறியதாக கருதி உரிமையியல் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

