தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு

விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு

விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு


ADDED : பிப் 27, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விளவங்கோடு சட்டசபை தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயதரணி வெற்றி பெற்றார். கடந்த வாரம் அவர், பா.ஜ.,வில் இணைந்தார்; எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை, சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக, சட்டசபை செயலர் சீனிவாசன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் அனுப்பினார்.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் காலியாக இருப்பதாக, நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதனால், லோக்சபா தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், பொன்முடியின் எம்.எல்.ஏ., பதவி காலியானது. ஆனாலும், அவர் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட, திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us