ADDED : நவ 13, 2024 11:32 PM
விருதுநக; சென்னை கருணாநிதி நுாற்றாண்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்க பொதுச்செயலாளர் சுபின் கூறியதாவது:
சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியது கண்டனத்துக்குரியது. மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். சமீப காலமாக மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
மருத்துவ பணியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பெரிய அளவில் நடந்தால் மட்டுமே விவாத பொருளாக மாறுகிறது. ஆனால் தினமும் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்குதலுக்கு ஆளாவதும் சாதாரணமாகி விட்டது. மருத்துவ ஊழியர்களை தாக்குபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.