ADDED : அக் 10, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டம் குறித்து, சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:
சத்துணவு துறையில் மட்டும், 63,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஒரே அமைப்பாளர் ஐந்து முதல் ஏழு மையம் வரை பார்க்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், கூடுதல் பணியாக, மையங்களின் தினசரி பதிவேட்டை இணையவழியில் பராமரிக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கு ஊழியர்களுக்கு மொபைல் போன் வழங்காமல், 'சிம் கார்டு' மட்டும் வழங்குகின்றனர். இவற்றை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காண்பதற்காக போராட்டத்தை முன்னெடுத்து உள்ளோம்.
இவ்வாறு கூறினர்.