தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சத்துணவு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘காலமுறை ஊதியம், காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றா விட்டால், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சங்கத் தலைவர் செல்லத்துரை, செயலர் ஜெசி ஆகியோர், சென்னையில் அளித்த பேட்டி:

சத்துணவு மைய காலியிடங்களை நிரப்புதல், உணவு செலவு மானியத்தை உயர்த்துதல், சத்துணவு அமைப்பாளர்களுக்கு பொறுப்புப்படி, 1,500 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக, வரும் 14ம் தேதி, சென்னையில் முதல்வர் விஜயிடம் பெருந்திறள் முறையீடு செய்வோம். கோரிக்கை நிறைவேறாவிட்டால், டிச., 9ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us