தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சத்துணவு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 14, 2026 07:12 PM

ADDED : அக் 14, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:12 PM ADDED : அக் 14, 2026 07:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: காலமுறை ஊதியம், காலை உணவு திட்டத்தை, சத்துணவு திட்டத்துடன் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றோர், '40 ஆண்டுகளைக் கடந்து பணியாற்றும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை, சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும்'என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதன்பின் அமைச்சர் ஜெகதீஸ்வரியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து, சங்கத் தலைவர் செல்லத்துரை, செயலர் ஜெசி ஆகியோர் கூறுகையில், 'சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியை சந்தித்து மனு அளித்தோம். அவரும் முதல்வரிடம் பேசி, கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதாக தெரிவித்தார்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us