ADDED : செப் 21, 2024 05:48 AM

கொடுங்கையூர்: கொடுங்கையூர், சிட்கோ சாலையில், எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி ஹோட்டல் செயல்படுகிறது. கடந்த திங்கட்கிழமை, அசைவ பிரியர்கள் பலரும் இந்த ஹோட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இவர்களில் 40க்கும் மேற்பட் டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம், எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி ஹோட்டலில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, ஹோட்டலில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்க முடியவில்லை. மாறாக, சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக, சமையலறைக்கு 'சீல்' வைத்தனர்.
பின், ஹோட்டலை மூட உத்தரவிட்டனர். அதன்படி, பராமரிப்பு பணி காரணமாக ஒரு நாள் விடுமுறை என, அறிவிப்பு பலகை வைத்து மூடினர். சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்படும் இந்த ஹோட்டலின் கிளைகளிலும், இதுபோன்ற புகார்கள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில், தொடர் புகார் எதிரொலியால் கொடுங்கையூர், எஸ்.எஸ்.பிரியாணி ஹோட்டலுக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று மதியம் 'சீல்' வைத்தனர்.