தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு 'சம்மன்'

 லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு 'சம்மன்'

 லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு 'சம்மன்'


ADDED : ஆக 28, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஒன்பது லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மத்திய அரசு அதிகாரிகள் இருவருக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

மத்திய பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிபவர் பாபு ராவ், 48. சென்னை கே.கே.நகரில், மத்திய பொதுப்பணித் துறை, மண்டல பயிற்சி மையத்தில், உதவிப் பொறியாளராக பணிபுரிபவர் மஞ்சுநாதன், 50.

இவர்கள், 2023ல், வருமான வரித்துறையில் பணிபுரிந்தபோது, சொத்து மதிப்பீடை குறைத்து காண்பிக்க, தொழில் அதிபர் ஒருவரிடம், ஒன்பது லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளனர்.

இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 'இவ்வழக்கில் வரும் ஏழு நாட்களுக்குள், இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, சி.பி.ஐ., அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us