UPDATED : ஜூன் 13, 2026 01:41 PM
ADDED : ஜூன் 13, 2026 01:29 PM

நமது சிறப்பு நிருபர்
ஜூன் 9ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரையிலான 4 நாட்களில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் 7 பேரைக் கைது செய்துள்ளோம் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கடந்த ஜூன் 9ம் தேதி திருப்பூர் மாநகராட்சியில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
* ஜூன் 9ம் தேதி, கீழ் திருச்செந்துாரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ சரவணன் கைது செய்யப்பட்டார்.
* ஜூன் 10ம் தேதி தேனியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ., கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
* ஜூன் 11ம் தேதி திருவள்ளூரில் நெல் கொள்முதலுக்கு ரூ.10 ஆயிரத்து 750 லஞ்சம் வாங்கிய கணக்காளர் சவுந்தர் கைது செய்யப்பட்டார்.
* ஜூன் 11ம் தேதி திண்டுக்கல்லில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் முகமது இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.
* ஜூன் 11ம் தேதி திண்டுக்கல்லில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மீனாம்பிகா கைது செய்யப்பட்டார்.
* ஜூன் 12ம் தேதி திண்டுக்கல்லில் ரூ.5 ஆயிரத்து 800 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
