கொள்ளையரிடம் உயிர் தப்பிக்க இறந்தது போல் நடித்த மூதாட்டி
கொள்ளையரிடம் உயிர் தப்பிக்க இறந்தது போல் நடித்த மூதாட்டி
ADDED : ஜூலை 28, 2025 03:11 AM
செங்கம்: மூதாட்டியை தலையணையால் அழுத்தி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த போது, இறந்தது போல் நடித்து, மூதாட்டி சாதுர்யமாக உயிர் தப்பினார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், தளவாநாயக்கன்பேட்டையை சேர்ந்தவர் ஞானவள்ளி, 86; தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, பின்பக்கம் வழியாக அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்தனர். ஞானவள்ளியின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொல்ல முயன்றனர்.
பயந்து போன மூதாட்டி இறந்தது போல் நடித்துள்ளார். இதனால் மர்ம ஆசாமிகள் அவர் வைத்திருந்த, மூன்றரை சவரன் நகை, 15,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் சென்றதும் மூதாட்டி கூச்சலிட்டார்.
இதைக்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரது பேரனான திருவண்ணாமலை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் தலைமை காவலர் ராஜேஷூக்கு தகவல் தெரிவித்தனர். ஞானவள்ளி புகாரின்படி, செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.