மார்ச் 7ல் பாஜ., சார்பில் புதிய தொழில்முனைவோர் மாநாடு
மார்ச் 7ல் பாஜ., சார்பில் புதிய தொழில்முனைவோர் மாநாடு
ADDED : பிப் 20, 2024 03:17 PM

சென்னை: தமிழக பாஜ., 'ஸ்டார்ட் அப்' பிரிவு சார்பில்,‛‛ இன்னோவேட் தமிழ்நாடு' எனும் மாநில அளவிலான புதிய தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி மார்ச் 7ல் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசிலிங்கம் பல்கலையில் நடக்கிறது.
தொழில்நுட்பத்தின் மூலம் சமூக தீமைகளை ஒழிக்க தீர்வுகளை உருவாக்கவும், அவற்றை செய்லபடுத்தக்கூடிய ஆர்வமும் ஆற்றலும் மிக்க தொழில்முனைவோர்களைக் கண்டறிந்து அந்நிறுவனங்களுக்குத் தேவையான வளங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வழிவகுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் முக்கிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர். 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 100க்கும் மேலான இளம் தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பாக தங்களது படைப்புகளை முன்வைக்கும் பங்கேற்பாளர்களுக்கு முதலீடு ஈட்டும் வாய்ப்புகள், தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஈர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கட்டணம் இல்லை. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார்.
புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தங்களது படைப்புகளை வெளிக்கொணர சிறப்பான தளமாக அமையும். இந்த ' இன்னோவேட் தமிழகம்' போட்டியில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் www.tnbjpstartup.org/events/ இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

