sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : நவ 14, 2024 12:58 AM

Google News

ADDED : நவ 14, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவம்பர் 14, 1889

உத்தர பிரதேச மாநிலம் அலஹாபாதில், மோதிலால் நேரு - ஸ்வரூப ராணி தம்பதியின் மகனாக,1889ல் இதே நாளில் பிறந்தவர் ஜவஹர்லால் நேரு.

இவரது தந்தை, செல்வ செழிப்புமிக்க வழக்கறிஞராக இருந்தார். இதனால், நேருவுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. தன், 15வது வயதில் பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் இயற்கை அறிவியல் படித்தார். அப்போது, சுதந்திரமடைந்தநாடுகளின் வளர்ச்சியை கவனித்து வளர்ந்தார். நாடு திரும்பி நேரடி அரசியலில் ஈடுபட்டார்.

காந்தியை சந்தித்து, அனைத்து சுதந்திர போராட்டங்களிலும் பங்கேற்று, பலமுறை சிறை சென்றார். காங்கிரஸ் கட்சியின் செயலர், தலைவர் பதவிகளை வகித்தார். சிறையில் இருந்தே, 'டிஸ்கவரிஆப் இந்தியா' எனும் தன் வரலாற்றை எழுதினார்.சுதந்திர நாட்டின் முதல் பிரதமராகி, திட்டக்குழுவைஉருவாக்கினார்.

பல தொழிற்சாலைகள், அணைகள், சுரங்கம்,உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்கி,உலக அரங்கில் நாட்டை உயர்த்திய இவர், 1964, மே 27ல் தன் 74வது வயதில் மறைந்தார்.

குழந்தைகளை நேசித்த இவரது பிறந்த நாளான இன்று, குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us