sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : ஜன 12, 2025 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 11:50 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி 13, 2016

தர்மபுரி மாவட்டம், கொல்லஹள்ளியில் வெங்கடாசல நாயுடு, காத்தம்மாள் தம்பதியின் மகனாக, 1925, ஜூன் 12ல் பிறந்தவர் வடிவேலு.

இவர், தர்மபுரி உயர்நிலை பள்ளியில் படித்தார். தன், 15வது வயதில் காங்கிரசில் சேர்ந்து, தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு ஆகிய சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், புதுச்சேரிக்கு பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைக்காததை எதிர்த்து, 'சமுதாயம்' என்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக, மக்கள் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் துவக்கிய, சோஷலிஸ்ட் குழுவில் சேர்ந்தார்.

சேலம், தர்மபுரி, மதுரை மாவட்டங்களில் நிலமற்றவர்களுக்காக போராட்டங்களை நடத்தி, 17 முறை சிறை சென்றார். பலனாக, 2,000 விவசாயிகள், 1,800 குடிசைவாசிகளுக்கு நிலம் பெற்றுத்தந்தார். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலர், ஜனதா தளத்தின் தலைவர் பதவிகளை வகித்தார். மீண்டும், 2002ல் காங்கிரசின் ஒருங்கிணைப்பாளரானார். இவர், களப்பிரர் கால வரலாற்றை, 'செம்பியர் திலகம்' என்ற நாவல் உட்பட, 30 நுால்களை எழுதி, தன், 91வது வயதில், 2016ல் இதே நாளில் மறைந்தார்.

புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட தியாகி, 'ஜி.ஏ.வி.,' நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us