
பிப்ரவரி 10, 1953
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், நரசய்யா அய்யங்காரின் மகனாக, 1882, மார்ச் 31ல் பிறந்தவர் என்.கோபாலசாமி அய்யங்கார்.
இவர், சென்னை வெஸ்லி பள்ளி, மாநிலக்கல்லுாரி, சட்டக் கல்லுாரிகளில் படிப்பை முடித்தார். சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், உதவிப் பேராசிரியராக பணியாற்றிய படியே, குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று, 1905 முதல் 1909 வரை, சென்னையின் துணை கலெக்டராக பணியாற்றினார்.
மத்திய போக்குவரத்து மற்றும் ரயில்வே துறை, பாதுகாப்பு துறைகளின் அமைச்சராக இருந்தார். காஷ்மீரை, டோக்ரா வம்சத்தின் ராஜா ஹரிசிங் ஆண்டபோது, பிரிட்டிஷ் அரசு, கோபாலசாமியை பிரதம அமைச்சராக நியமித்தது. சுதந்திரத்துக்குப் பின் அரசியலமைப்பு வரைவுக்குழுவில் இடம்பெற்று, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
இவர் 1953ல், தன் 71வது வயதில், இதே நாளில் சென்னையில் காலமானார். காஷ்மீர் பிரச்னையை ஐ.நா., சபையில் பேசிய அமைச்சர் மறைந்த தினம் இன்று!