
பிப்ரவரி 20, 1901
ஆந்திர மாநிலம், பொப்பிலியின் ஜமீன்தார் வெங்கட கிருஷ்ண ரங்காராவின் மகனாக, 1901ல் இதே நாளில் பிறந்தவர் ராமகிருஷ்ண ரங்காராவ்.
வீட்டிலேயே ஆங்கில கல்வி கற்ற இவர், தந்தை மறைவுக்கு பின் பொப்பிலியின், 13வது அரசராக பதவி ஏற்றார். தன் செல்வாக்கால், 'கவுன்சில் ஆப் ஸ்டேட்' எனும் இந்திய பார்லிமென்ட் உறுப்பினர் ஆனார். நீதிக்கட்சியில் சேர்ந்து, விசாகப்பட்டினம் எம்.எல்.ஏ., ஆனார். நீதிக்கட்சி தலைவர் முனுசாமி நாயுடுவை தோற்கடித்து, கட்சியின் தலைவராகவும், சென்னை மாகாண முதல்வராகவும் பதவியில் அமர்ந்தார்.
தமிழ் பெயரிலிருந்த ஊர்களை, அரசு ஆவணங்களில் தெலுங்கு பெயராக மாற்றினார். 1934ல் நடந்த தேர்தலில் காங்கிரசிடம் தோற்றும், காங்கிரசின் உட்கட்சி பூசலை பயன்படுத்தி முதல்வரானார்.
இவரால் விரக்தியடைந்த தமிழர்கள், ராஜாஜியை முதல்வராக்கினர். 1978, மார்ச் 10ல், தன் 77வது வயதில் மறைந்தார். நீதிக்கட்சி முதல்வர், 'பொப்பிலி ராஜா' பிறந்த தினம் இன்று!

