
மார்ச் 2, 1896
திருநெல்வேலி மாவட்டம், ராசவல்லிபுரம் கிராமத்தில், பிறவிப்பெருமான் பிள்ளை - சொர்ணம்மாள் தம்பதிக்கு மகனாக, 1896ல் இதே நாளில் பிறந்தவர் ரா.பி.சேதுப்பிள்ளை.
ராசவல்லிபுரம் திண்ணைப் பள்ளியில் படித்த இவர், செப்பறை திருமட தலைவர் அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றை கற்றார்.
பாளையங்கோட்டை, திருநெல்வேலி பள்ளிகள், சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் படித்து, அதே கல்லுாரியில் தமிழாசிரியரானார். சட்டம் படித்து, திருநெல்வேலியில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தமிழறிஞர், சென்னை பல்கலையில் பேராசிரியராக பணியாற்றி, வையாபுரி பிள்ளையுடன் தமிழ் பேரகராதியை உருவாக்கினார். சென்னையில் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் சொற்பொழிவுகளை ஆண்டுக் கணக்கில் நடத்தினார்.
இவரின் பல நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவர், 1961, ஏப்ரல் 25ல், தன், 65வது வயதில் மறைந்தார். செந்தமிழறிஞர் பிறந்த தினம் இன்று!

