
மார்ச் 17, 1926
கேரள மாநிலம் மலபாரில், கண்ணன் - ருக்மணி தம்பதிக்கு மகனாக, 1926ல் இதே நாளில் பிறந்தவர் கே.சங்கர்.
இவரது தந்தை கோவை பஞ்சாலை யில் வேலை செய்ததால், இவரும் கோவையில் படித்தார். ஆங்கில திரைப்படங்களை பார்த்ததால், இயக்குநர் ஆகும் ஆசையில் சென்னை வந்தார். ஏ.வி.எம்., நிறுவனத்தில் எடிட்டரானார்.
பின், டாக்டர் என்ற சிங்களப் படத்தை இயக்கினார், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களையும் இயக்கினார். எம்.ஜி.ஆர்., நடிப்பில் பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில் உள்ளிட்ட படங்களையும், சிவாஜி நடிப்பில் ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, அன்புக்கரங்கள் உள்ளிட்ட படங்களையும், என்.டி.ராமராவ் நடிப்பில் பூகைலாஷ், ஜெயலலிதா நடிப்பில் கவுரி கல்யாணம் உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.
இவர் இயக்கிய, தாய் மூகாம்பிகை, வருவான் வடிவேலன் உள்ளிட்ட பக்தி படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. பாலிவுட்டின் கனவுக் கன்னியான ஹேமமாலினியை அறிமுகப்படுத்தியவர் இவரே. இவர் இயக்கிய ஜெயலலிதா முதல்வரானதும், அவரிடம், தமிழக அரசின் 'ராஜா சாண்டோ' விருதை பெற்றார். இவர், தன், 79வது வயதில், 2006 மார்ச் 5ல் காலமானார்.
எம்.ஜி.ஆர்., - என்.டி.ஆர்., ஜெயலலிதா ஆகிய முதல்வர்களை இயக்கிய இயக்குநர் பிறந்த தினம் இன்று!