
ஜூன் 14, 2019
கடலுார் மாவட்டம், திருமூலத்தானம் கிராமத்தில், அய்யாதுரையின் மகனாக, 1935ல் பிறந்தவர் அ.தாமோதரன்.
இவர், தன் சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் வழிகாட்டுதலில், 'திருக்குறளின் மொழி' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
அண்ணாமலை பல்கலையின் மொழியியல் துறை உயராய்வு மையத்தில், விரிவுரையாளராக சேர்ந்தார். இவரது முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரையை படித்த செக் நாட்டு தமிழறிஞர் கமில் சுவலபில், இவரை ஜெர்மனியில் உள்ள ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்துக்கு பரிந்துரைத்தார். அங்கு, 32 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
சென்னை பல்கலையின் தமிழ் பேரகராதி, கிரியாவின் தற்கால தமிழ் அகராதி உருவாக்கத்தில் வழிகாட்டியாக பணியாற்றிய இவர், தன் 84வது வயதில், 2019ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!