sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகஸ்ட் 29, 1905

-------- உத்தர பிரதேச மாநிலம், அலஹாபாதில், சமேஷ்வர் சிங் - சரதா சிங் தம்பதியின் மகனாக, 1905ல் இதே நாளில் பிறந்தவர் தியான்சந்த்.

இவர், பாதுகாப்பு படை வீரரும், ஹாக்கி வீரருமான தன் தந்தையிடம் ஹாக்கி விளையாட கற்றார். தன் தந்தையின் பணி மாறுதலால், பல நகரங்களுக்கு மாறியதால், ஆறு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றார்.

தன் தந்தை, அண்ணன்களை பின்பற்றி, ஹாக்கி விளையாட்டில் படிப்படியாக முன்னேறினார். இந்திய ஹாக்கி அணியில் சேர்ந்து, கேப்டன் ஆனார். 1928ல் ஆம்ஸ்டர்டாம், 1932ல் லாஸ் ஏஞ்சல்ஸ், 1936ல் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கோல் மழை பொழிந்து, இந்தியா தங்கம் வெல்ல காரணமானார்.

இவர் தலைமையிலான அணி, எட்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, ஏழில் வென்றது. பெர்லின் ஒலிம்பிக்கில், இவரது ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர், ஜெர்மனி குடியுரிமை தந்து, ராணுவ உயர் பதவி தர முன்வந்தார். அதை மறுத்து, இந்தியராகவே வாழ்ந்து, 74வது வயதில், 1979ல், டிசம்பர் 3ல் மறைந்தார்.

தேசிய விளையாட்டு தினம் கொண்டாட காரணமானவரான தியான்சந்த் பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us