sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


ADDED : பிப் 21, 2026 03:13 AM

Google News

ADDED : பிப் 21, 2026 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்ரவரி 21: இலங்கையின் யாழ்ப்பாணம், மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட விஸ்வநாத பிள்ளையின் மகனாக, 1855, மே 25ல், சென்னை, கோமளேஸ்வரன்பேட்டையில் பிறந்தவர், கனகசபை பிள்ளை.

இவரது தந்தை, ஆங்கில - தமிழ் அகராதி உருவாக்கும் பணிக்காக சென்னையில் குடியேறியதால், இவரும் சிறு வயதிலேயே சென்னை பல்கலையில் பட்டம் பெற்று, 'பாய் கிராஜுவேட்' என்ற பெருமையை பெற்றார்.

தொடர்ந்து சட்டம் படித்து, மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றினார். சென்னை பல்கலை யில், தமிழ் மொழிபெயர்ப்பாளர், தபால் துறையில் கண்காணிப்பாளர் பொறுப்புகளை வகித்தார்.

இவர் முதன் முதலில், முறையான கால வரலாற்று ஆய்வுடன் தமிழர் வாழ்வியலை அணுகினார். சங்ககால மன்னர்களின் காலத்தை 'கஜபாகு காலம்காட்டி' என்ற புதிய முறையால் வரிசைப் படுத்தியதுடன், '1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்ற ஆங்கில நுாலையும் எழுதினார்.

'களவழி நாற்பது, கலிங்கத்து பரணி, விக்கிரம சோழன் உலா' உள்ளிட்ட நுால்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அரிய ஓலைச்சுவடிகளை சேகரித்து, உ.வே.சாமிநாத அய்யருக்கு வழங்கி, அவரது ஆய்வுக்கு உதவியவர், தன் 50வது வயதில், 1906ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!






      Dinamalar
      Follow us