sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : மார் 09, 2026 01:33 AM

Google News

PUBLISHED ON : மார் 09, 2026 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 9, 2003

தேனி மாவட்டம், கோம்பையில், வீ.பரமசிவம் பிள்ளை - காமாட்சி தம்பதியின் மகனாக, 1915, செப்டம்பர் 5ல் பிறந்தவர் வீ.ப.கா.சுந்தரம்.

நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், ராமநாதபுரம் அரசவை கவிஞரான சங்கரசிவத்திடம் முறையாக இசை, தாள நுணுக்கங்களையும் குழல், முழவு போன்ற கருவிகளையும் இசைக்க கற்றார். பின், சென்னை, மதுரை பல்கலைகளில் வித்வான், முனைவர் பட்டங்களை பெற்றார்.

மதுரை அமெரிக்கன் கல்லுாரி, மதுரை பல்கலை தமிழ் துறைகளில் பணியாற்றினார். சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட இவர், தமிழ் இசையின் வேர்களை, சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், பஞ்சமரபு நுால்களில் ஆராய்ந்தார்.

கிரேக்க - தமிழ் இசை தொடர்புகளையும் ஆராய்ந்தவர், கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார். 'தமிழிசை வளம், தமிழிசை கலை களஞ்சியம் - 4 தொகுதிகள்' உள்ளிட்ட நுால்களில், இசை, நாட்டியம், இசை கருவிகள், பாடலை இயற்றியோர் வரலாறு, பாடல்களின் தோற்றம், வளர்ச்சி, தாளக் கட்டு, அவற்றை படிக்கும் முறை உள்ளிட்ட நுணுக்கங்களை விரிவாக விளக்கினார்.

இவர், தன், 88வது வயதில், 2003ல், இதே நாளில் மறைந்தார்.






      Dinamalar
      Follow us