ADDED : செப் 17, 2011 01:00 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆதிலா பானு கொலை வழக்கில், மலேசியாவுக்கு தப்பி ஓடியவரை, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் பாரதி நகரில் வசித்து வந்தவர் ஆதிலாபானு, 26. இவரது குழந்தை அதிரா, 7, அஸ்லாம், 5. இவர்களை, கடந்த ஆண்டு நவ., 8ம் தேதியன்று, சிலர் காரில் கடத்தி கொலை செய்து, வாடிப்பட்டி அருகே கண்மாயில் வீசி சென்றனர். நவ., 11ம் தேதியன்று உடலை மீட்டு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வந்தனர். இதில், 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒன்பது பேர் கைதாகியுள்ள நிலையில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சாகுல், அவரது அம்மா ரம்ஜான்பீவி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன், வாணியை சேர்ந்த அர்ஷத் ஆகியோர் மலேசியாவுக்கு தப்பிச் சென்றனர். மணிவண்ணன் மலேசியாவில் இருந்து திருச்சி ஏர்போர்ட்டிற்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கைது செய்து, ராமநாதபுரம் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் பாஸ்கரன், மணிவண்ணனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.