ஒரே நாடு ஒரே தேர்தல் - ஜனநாயகம் மீதான தாக்குதல்: மத்திய அரசுக்கு முதல்வர் எதிர்ப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் - ஜனநாயகம் மீதான தாக்குதல்: மத்திய அரசுக்கு முதல்வர் எதிர்ப்பு
ADDED : டிச 12, 2024 05:54 PM

சென்னை: '' ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைக்கும், '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக ' ஒரே நாடு ஒரே தேர்தல் ' என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா' என்ற கொடூரமான மசோதாவை பார்லிமென்டில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.