UPDATED : அக் 19, 2026 07:12 PM
ADDED : அக் 19, 2026 06:50 PM
புதுக்கோட்டை: திருமயத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு வாகனங்கள் கழுவும் போது மின்சாரம் பாய்ந்து சேக்அப்துல்லா, 45, என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் சேக்அப்துல்லா. இவர், திருமயம்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் வாட்டர் வாஷ் செய்யும் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்துள்ளார்.
அவரது கடைக்கு நேற்று வாட்டர் வாஷ் செய்ய வந்த வாகனத்தை ஷேக்அப்துல்லா மகன் ஜாகிர்உசேன் வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்தார். அப்போது ஸ்விட்ச் போர்டில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறிந்த ஜாகிர்உசேன் ஸ்விட்ச் பெட்டியில் மின்சாரம் பாய்கிறது என தந்தை ஷேக்அப்துல்லாவிடம் கூறியுள்ளார்.
சுவிட்ச் போர்டை ஷேக்அப்துல்லா சரி செய்ய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமயம் போலீசார், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
