ADDED : ஜூலை 13, 2011 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : மதுரை, பாஸ்கரதாஸ்நகரை சேர்ந்த ஜேம்ஸ்விக்டர் மகன் அசோகன்(46).
தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தார். அவரை சந்திப்பதற்காக தூத்துக்குடி, சக்திவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த செல்லையா(45) வந்திருந்தார். அவர் அசோகனுக்கு கொண்டுசென்ற தின்பண்டங்கள் பார்சலில் ஒரு பக்கோடா பொட்டலம் இருந்தது. அதில் 15 கிராம் கஞ்சா இருந்தது சிறைவாசலில் சோதனை நடத்தும் விஜிலன்ஸ் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். செல்லையாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர்.