sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாம்பரத்தில் மூவர் உயிரிழப்பு; சுகாதாரமற்ற குடிநீரே காரணம் என குற்றச்சாட்டு!

/

தாம்பரத்தில் மூவர் உயிரிழப்பு; சுகாதாரமற்ற குடிநீரே காரணம் என குற்றச்சாட்டு!

தாம்பரத்தில் மூவர் உயிரிழப்பு; சுகாதாரமற்ற குடிநீரே காரணம் என குற்றச்சாட்டு!

தாம்பரத்தில் மூவர் உயிரிழப்பு; சுகாதாரமற்ற குடிநீரே காரணம் என குற்றச்சாட்டு!

12


UPDATED : டிச 05, 2024 12:15 PM

ADDED : டிச 05, 2024 10:21 AM

Google News

UPDATED : டிச 05, 2024 12:15 PM ADDED : டிச 05, 2024 10:21 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனை அறியாமல் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த திரிவேதி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, பல்லாவரம் மலைமேடு பகுதியில் அமைச்சர் த.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அவர், உடனடியாக அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், '23 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் சாப்பிட்ட உணவுகளில் ஏதேனும் பிரச்னையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் மூலம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்தப் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கும். இன்னும் ஒரு மணி நேரத்தில் காரணம் தெரிய வந்துவிடும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மோகனரங்கன், வரலட்சுமி ஆகியோரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

கண்டனம்

சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் ஸ்டாலினின் தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புயல் கரையை கடந்த பிறகு கழிவுநீர் கலக்காமல் குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். சென்னை தாம்பரத்தில் சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனம். தமிழகம் முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று; அதனை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது அரசின் கடமை. புயல் கரையைக் கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.

மெத்தனப் போக்குடன் அதை செய்யாமல் விடுத்து, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் ஸ்டாலினின் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தக்க சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்து, தமிழகம் முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us