ADDED : டிச 12, 2024 09:54 AM

சென்னை: பாபா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.,வினர், இப்போது ரஜினியை வைத்து படம் வெளியிடுவது, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்., துணைத் தலைவர் ராம சுகந்தன்: அன்று ரஜினியின், பாபா படத்தை வெளியிட விடாமல், பா.ம.க.,வினர் பிரச்னை உண்டாக்கியபோது, ரஜினியை நானும், வன்னியர் சங்கத் தலைவர்கள் ஏ.கே.நடராஜன்,தீரன் போன்றவர்களும் சந்தித்து ஆதரவு அளித்தோம். இன்று, அதே ராமதாஸ் குடும்பத்தினர் ரஜினியை சந்தித்து, தங்களின் குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்துள்ளனர். வாழ்க்கை ஒரு வட்டம்.
டவுட் தனபாலு: அது சரி... உங்க கட்சியை எதிர்த்துதான், தமிழகத்துல தி.மு.க.,வையே அண்ணாதுரை துவங்கினார். இப்ப, தி.மு.க.,வின் ஊதுகுழலாகவே உங்க கட்சி மாறிடுச்சே... இதுவும், வாழ்க்கை ஒரு வட்டத்துக்கு உதாரணம்தான் என்றால், 'டவுட்' இல்லாம ஏத்துக்குவீங்களா?