sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள்-22

/

தினமும் ஒரு பெருமாள்-22

தினமும் ஒரு பெருமாள்-22

தினமும் ஒரு பெருமாள்-22


ADDED : ஜன 05, 2025 06:59 PM

Google News

ADDED : ஜன 05, 2025 06:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்ப்ப தோஷமா...


செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தில் அருள்பாலிக்கிறார் மலைமண்டலப் பெருமாள். தெற்கு பத்ரிநாத் என அழைக்கப்படும் இத்தலத்திற்கு வந்தால் சர்ப்ப தோஷம் நீங்கும். சிறிய மலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார் பெருமாள். இதனால் மலைமண்டலப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கருட பகவான் விசேஷமானவர். தலையில் ஒன்று, இரு காதுகளில் ஒவ்வொன்று, மார்பில் மாலையாக இரண்டு, இரு தோள்களிலும் ஒவ்வொன்று, இடுப்பில் அரைஞாண் கயிறாக ஒன்று என எட்டு நாகங்களை ஆபரணமாக கொண்டுள்ளார். இதனால் இவரை 'அஷ்டநாக கருடன்' என அழைக்கிறார்கள்.

செவ்வாய், சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி இவரை வழிபடுகிறார்கள். இதன் மூலம் சாய கிரகங்களான ராகு, கேதுக்களால் வரும் பிரச்னை தீரும். 850ல் கட்டப்பட்ட இக்கோயில் விஜயநகரப் பேரரசுடன் தொடர்பு கொண்டது.

செங்கல்பட்டில் இருந்து சதுரங்கப்பட்டினம் என அழைக்கப்படும் சத்ராஸின் கல்பாக்கம் 30 கி.மீ.,

நேரம்: காலை 7:30 - 11:00 மணி மாலை 4:30 - 8:00 மணி

தொடர்புக்கு: 95852 12797, 97862 77932

அருகிலுள்ள தலம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் 16 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 11:00 மணி மாலை 4:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 94428 11149






      Dinamalar
      Follow us