sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள் -14

/

தினமும் ஒரு பெருமாள் -14

தினமும் ஒரு பெருமாள் -14

தினமும் ஒரு பெருமாள் -14


ADDED : டிச 28, 2024 06:37 PM

Google News

ADDED : டிச 28, 2024 06:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கடம் தீர...


காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடலில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசித்தால் சங்கடம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பாலாறு, செய்யாறு, வேகவதி என மூன்று நதிகளும் இங்கு சங்கமிக்கின்றன. இதனால் இப்பகுதிக்கு முக்கூடல் என்று பெயர். இத்தலத்தில் சுவாமி கையில் சங்கு, சக்கரம் ஏந்தி பெருமாளாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் கொண்டு சிவனாகவும், தாமரையின் மீது நின்று பிரம்மாவாகவும் காட்சி தருகிறார்.

கார்த்திகை மாதத்தில் பெருமாளுக்கு மூலிகை எண்ணெய் காப்பு செய்யும்போது மட்டும்தான் அவரது ஜடாமுடி தரிசனத்தை காண முடியும். பூமாதேவி, சிவபக்தரான மார்க்கண்டேயன், தொண்டைமான் மன்னருக்கு இத்தல பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். இங்கு ஓடும் நதி கங்கைக்கு நிகரானது. இதில் நீராடி பெருமாளை வழிபட்டால் சங்கடம் நீங்கும். மங்களம் உண்டாகும்.

காஞ்சிபுரத்தில் இருந்து 20 கி.மீ.,

நேரம்: காலை 9:00 - 12:00 மணி மாலை 4:00 - 6:00 மணி

தொடர்புக்கு: 95004 83321

அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் 22 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 12:30 மணிமாலை 4:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 94439 90773






      Dinamalar
      Follow us