ADDED : ஜன 18, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வரத்து அதிகரித்து சின்ன வெங்காயம் விலை குறைந்து வருவதால் நுகர்வோர் அவற்றை அதிகளவில் வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
அரியலுார், பெரம்பலுார், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. கடந்தாண்டு சின்ன வெங்காயம் உற்பத்தி மழையால் பாதிக்கப்பட்டது.
இதனால், 1 கிலோ சின்ன வெங்காயம், 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்து உள்ளது. வெளிநாட்டிற்கு அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால், சின்ன வெங்காயம் புழக்கம் அதிகரித்து, அவற்றின் விலை வேகமாக குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ சின்ன வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.