1 மட்டும் மூடல்....! 20 சுரங்கப்பாதைகளில் சீரான போக்குவரத்து; தற்போதைய நிலவரம் இதுதான்!
1 மட்டும் மூடல்....! 20 சுரங்கப்பாதைகளில் சீரான போக்குவரத்து; தற்போதைய நிலவரம் இதுதான்!
UPDATED : அக் 16, 2024 10:32 AM
ADDED : அக் 16, 2024 07:11 AM

சென்னை: சென்னையில் 20 சுரங்கப்பாதைகளில் வழக்கம்போல் போக்குவரத்து இயக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டும் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் துவக்கமே, வேற லெவலில் உள்ளது. இரண்டு தினங்களாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. தலைநகர் சென்னையில் இடைவிடாது மழை பெய்து வருகின்றது. நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மொத்தம் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டும் மூடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால், கணேஷ்புரம் சுரங்கப்பாதையில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
20 சுரங்கப்பாதைகளில், தண்ணீர் தேங்கவில்லை. போக்குவரத்து சீராக உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அந்த சுரங்கப்பாதைகள் விவரம் வருமாறு;
*கத்திவாக்கம்
*மாணிக்கம் நகர்
*வியாசர்பாடி
*எம்.சி. ரோடு(ஸ்டான்லி மருத்துவமனை)
*ரிசர்வ் வங்கி
*கெங்குரெட்டி
*வில்லிவாக்கம்
*ஹாரிங்டன்
*நுங்கம்பாக்கம்
*ஜோன்ஸ் ரோடு
*துரைசாமி சுரங்கப்பாதை
*மேட்லி
*ரங்கராஜபுரம்
*பஜார் ரோடு
*மவுண்ட்
*தில்லை கங்கா நகர்
*பழவந்தாங்கல்
*அரங்கநாதன்
* ஸ்டான்லி நகர்
* பெரம்பூர்
இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காததால் வாகன ஓட்டிகள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.