கோவில்களில் பக்தி பாடல்களுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட்
கோவில்களில் பக்தி பாடல்களுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட்
UPDATED : மார் 05, 2025 04:52 PM
ADDED : மார் 05, 2025 04:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோவில் வளாகத்தில் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கோவில் திருவிழாக்களின் போது இசைக்கச்சேரி நடப்பது வழக்கம். சில இடங்களில் பக்தி பாடல்களுடன் சினிமா பாடல்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.
இந்நிலையில், புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த இசைக்கச்சேரியில் பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்கள் தான் அதிகம் பாடப்பட்டதாகக்கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சினிமா பாடல்களை பாட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட், ' கோவில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நடத்தும் போது பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். சினிமா பாடல்கள் பாட அனுமதி கிடையாது.' என உத்தரவிட்டு உள்ளது.