ADDED : நவ 14, 2025 07:24 AM

நாடு முழுதும் நடந்து வரும் சம்பவங்களை பார்த்தால், லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியது தேசிய உளவுத்துறை. இதுவரை பணத்தேவை உள்ளவர்கள் மட்டும் தான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் டாக்டர்கள். இவர்களைப் படிக்க வைக்க, இந்திய அரசுதான் செலவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை, 2,900 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டுள்ளது. 15 கிலோ வெடி பொருள் வெடித்ததற்கே, இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்றால், மொத்தமும் வெடித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்.
தி.மு.க.,வும் வி.சி.,யும் இத்தகையோரை காப்பாற்றி, அவர்களுக்காக முட்டு கொடுப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறது. பயங்கரவாத செயலில் ஈடுபடுவோர், ஒரே மதத்தைச் சேர்ந்தோராக இருப்பது குறித்து, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

