ADDED : பிப் 22, 2024 02:39 AM

காவல் துறை சார்பில், 23.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, காவல் குடியிருப்புகள் மற்றும் காவல் நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம், வி.எச்.ரோட்டில் 16.58 கோடி ரூபாய் செலவில், 96 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கோவை ரத்தினகிரி, சென்னை நந்தம்பாக்கம், புதுக்கோட்டை மழையூர், செங்கல்பட்டு தாலுகா ஆகியவற்றில் போலீஸ் நிலையம், சென்னை அசோக் நகரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையம், 6.95 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது.
இவற்றை முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத் தலைவர் விசுவநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை மாவட்டத்திலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் வழியே, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.