தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிறப்பு ரயில்கள் இயக்கம்

 சிறப்பு ரயில்கள் இயக்கம்

 சிறப்பு ரயில்கள் இயக்கம்


ADDED : செப் 16, 2026 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:நாளை நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

திருநெல்வேலி- -கூடல்நகர் இன்று (செப்.,16) மதியம் 1:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மாலை 6:30 மணிக்கு கூடல்நகர் வருகிறது. மறுமார்க்கத்தில் நாளை மதியம் 12:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 5:50 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.

சேரன்மகாதேவி, கல்லிடைகுறிச்சி, அம்பா சமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.

ராமேஸ்வரம்- -பழநி இன்று மாலை 4:55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், இரவு 10:30 மணிக்கு பழநி செல்கிறது. மறுமார்க்கத்தில் நாளை மதியம் 2:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 8:10 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது.

மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, திருப்புவனம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.

போடி -- கூடல்நகர் நாளை காலை 11:20 மணிக்கு போடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 1:30 மணிக்கு கூடல்நகர் வருகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 4:30 மணிக்கு போடி செல்கிறது.

தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி, மதுரை ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us