அரசியலில் எதுவும் நடக்கலாம்: முதல்வரை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி
அரசியலில் எதுவும் நடக்கலாம்: முதல்வரை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி
UPDATED : ஜூலை 31, 2025 06:48 PM
ADDED : ஜூலை 31, 2025 05:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: '' அரசியலில் எதுவும் நடக்கலாம்,'' என முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதன் பிறகு, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் ஓ.பி.எஸ்., தரப்பு அறிவித்தது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் ஓபிஎஸ் மீண்டும் உடன் இருந்தார். அவருடன், மகன் ரவிந்திரநாத், முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவர்களை, துணை முதல்வர் உதயநிதி வாசல் வரை வந்து வரவேற்றார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்: ஓபிஎஸ் பேட்டி
இன்று காலை முதல்வர் ஸ்டாலினை, தேமுதிகவின் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.