அ.தி.மு.க., ஒண்ணா இருக்கக்கூடாது? அதானே? தி.மு.க.,வை கண்டித்த ஓ.பி.எஸ்.
அ.தி.மு.க., ஒண்ணா இருக்கக்கூடாது? அதானே? தி.மு.க.,வை கண்டித்த ஓ.பி.எஸ்.
ADDED : செப் 22, 2024 12:19 PM

சென்னை; அ.தி.மு.க., ஒன்றுபடுவதை தடுக்கும் நோக்கிலே வைத்திலிங்கம் மீது தி.மு.க., அரசு வழக்கு போடுவதாக முன்னாள் முதல்வர் ஓ, பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் சுருக்க விவரம் வருமாறு; சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என எல்லாம் வழிகளிலும் வரிகளை உயர்த்தி மக்களின் கடும் அதிருப்தியை திமுக சந்தித்துக் கொண்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டு அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தன்னுடைய சாதனைகளால் தி.மு.க., வெற்றி பெறவில்லை.எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் தான் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 2025ல் அ.தி.மு.க., ஒன்றிணையும் என்று கூறியிருந்தார். எங்கு அ.தி.மு.க., ஒன்றிணைந்து விடுமோ என்கிற அச்சத்தில், எஸ்.பி வேலுமணியின் மீது 2 நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து வைத்திலிங்கம் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது.
ஒன்றிணையவிடாமல் தடுத்து அதன்மூலம் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று முதல்வர் கனவு காண்கிறார். அவருடைய கனவு நிச்சயம் பலிக்காது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுபடும், வீறுகொண்டு எழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.