இபிஎஸ் உடன் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி., தர்மர் சந்திப்பு
இபிஎஸ் உடன் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி., தர்மர் சந்திப்பு
UPDATED : ஜன 24, 2026 07:36 PM
ADDED : ஜன 24, 2026 07:18 PM

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான ராஜ்ய சபா எம்.பி., தர்மர் நேரில் சந்தித்து பேசினார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அண்மையில் ஓபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து தை மாத இறுதிக்குள் சொல்லுவேன் என்று ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில், அவரது நெருங்கிய ஆதரவாளரான ராஜ்யசபா எம்பி தர்மர், இபிஎஸை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் தர்மர் பேசியதாவது; அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். என்னோடு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்புக்குழுவில் இருந்து இபிஎஸ்ஸை சந்தித்து கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டனர்.
தீய சக்தி திமுகவின் ஆட்சியை அகற்ற வேண்டும். வருங்கால முதல்வர் இபிஎஸ் தலைமையில், மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த சந்திப்பை மேற்கொண்டேன். ஓபிஎஸ்ஸின் முடிவு பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். ஓபிஎஸ்ஸிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, எனக் கூறினார்.

