இன்று ஆரஞ்சு, நாளை ரெட் அலர்ட்; பருவமழை குறித்து முழு விபரம் இதோ!
இன்று ஆரஞ்சு, நாளை ரெட் அலர்ட்; பருவமழை குறித்து முழு விபரம் இதோ!
ADDED : மே 24, 2025 01:38 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 24) 4 மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யும்; நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளையும், நாளை மறு நாளும் அதி கனமழை (சிவப்பு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (மே 24) 4 மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,
* தென்காசி,
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்,
மஞ்சள் அலர்ட்
அதேபோல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (மே 25), நாளை மறுநாள் (மே 26)
சிவப்பு அலர்ட்
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் ஆகிய இரண்டு மாவட்டகளில் நாளையும், நாளை மறு நாளும் அதி கனமழை (சிவப்பு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
மஞ்சள் அலர்ட்
திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
மே 27ம் தேதி
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஆகிய 2 மாவட்டங்களில் மே 27ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது.
மஞ்சள் அலர்ட்
அதேபோல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 28ம் தேதி
மே 28ம் தேதி,நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.