ADDED : நவ 14, 2024 11:47 PM
சென்னை:'அரசு பள்ளிகளை தத்தெடுத்து, கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும்' என, மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் ஒவ்வொருவரும், அவர்கள் சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் ஆலோசித்து, ஒவ்வொருவரும் இரண்டு அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்.
அந்த பள்ளிகளுக்கு மாதம் இருமுறை சென்று, பள்ளி வளாக துாய்மை, வகுப்பறையில் கற்பிக்கும் நடைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
மாணவர்கள் - ஆசிரியர்கள் அணுகுமுறை, கற்பித்தலுக்கான கருவிகளை பயன்படுத்தும் விதம் உள்ளிட்டவற்றை கண்காணித்து, அந்த பள்ளியின் மேம்பாட்டுக்கான விஷயங்களை, தலைமை ஆசிரியருக்கு எடுத்துரைத்து முன்னேற்ற வேண்டும்.
அவ்வாறான செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.