ADDED : ஆக 17, 2011 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டங்களில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்டங்களில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மற்ற போட்டிகள் நடத்தப்படாத நாட்களில் மாதாந்திர போட்டிகளில் தடகளம், நீச்சல் போட்டிகள் இடம்பெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பங்கேற்கலாம். போட்டி நடத்தும் செலவிற்காக அரசு மானியமாக போட்டிக்கு மாவட்ட ஆணையத்திற்கு 13 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது. நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.