ADDED : ஜன 19, 2024 11:34 PM
சென்னை:கார்த்தி சிதம்பரம்தாக்கல் செய்த மனுவுக்கு, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.
மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ''மனுதாரர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. 10 ஆண்டுகள் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க முடியாது; --------ஓராண்டுக்கு புதுப்பிக்கப்படும்,'' என்றார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.கோவிந்தராஜ் ஆஜராகி, ''பாஸ்போர்ட் சட்டவிதிப்படி, 10 ஆண்டுகள் புதுப்பித்து தர வேண்டும். அதிகாரிகள் வேண்டுமென்று காலதாமதம் செய்கின்றனர்,'' என்றார்.
இதையடுத்து, மனுவுக்கு விரிவான பதிலளிக்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்., 19க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.