ADDED : செப் 09, 2026 12:21 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, 30 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக, 2021ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், விஜய நல்லதம்பி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிந்தனர்.
ராஜேந்திர பாலாஜி பணம் பெற்று தன்னை ஏமாற்றியதாக விஜய நல்லதம்பி அளித்த புகாரில், ராஜேந்திர பாலாஜி உட்பட, ஏழு பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தன்னிடம் பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப தரக்கோரி, ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார், பாஸ்போர்ட்டை ராஜேந்திர பாலாஜியிடம் திருப்பிக் கொடுக்கவும், நீதிமன்ற அனுமதியின்றி அவர் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது எனவும், நிபந்தனை விதித்துஉத்தரவிட்டார்.
